காவேரிப்பட்டினம், ஜூன் 22 –
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஜி பார்த்திபன் தலைமையில் இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாக மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சுரேஷ், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர்.
ஓசூர் சந்திரசேகர மருத்துவமனை டாக்டர் சந்திரமௌலி மற்றும் டாக்டர் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் இதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் முற்றிலும் இலவசமாக தவெக மருத்துவர் அணி சார்பில் வழங்கிய இந்த இலவச மருத்துவ முகாமிற்கு காவேரிப்பட்டினம் மட்டுமின்றி அருகிலுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், மற்றும் மருத்துவக் குழுவினர் இந்த இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



