தஞ்சாவூரில் உள்ள பெசன்ட் இல்ல த்தில் நகைச்சுவை மாமன்றத்தின் சார்பில் நகைச்சுவை மாமருந்து நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது
விழாவில் நகைச்சுவை மாமன்ற தலைவர், கலைமாமணி டாக்டர் சு நரேந்திரன் தலைமை வகித்து நூலை வெளியிட்டார் .முதல்நூலை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் முரசொலி பெற்றுக் கொண்டு,சிறப்புரையாற்றினார்
மேனாள் நகர் மன்றத்தலைவர் இறைவன் முன்னிலை வகித்தார்
பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகம் மேனாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் பழனி அரங்கசாமி நூல் அறிமுகம் செய்து வைத்தார்
தஞ்சாவூர் இருதய நல சிறப்பு நிபுணர் டாக்டர் முருகேசன், கரந்தை தமிழ்ச் சங்க செயலாளர் சுந்தரவதனம் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்கள்
நூலாசிரியர் கோ. ஜெயக்குமார் ஏற்புரைவழங்கினார்.திருச்சிராப்பள்ளி ஜமால் முகமதுகல்லூரி தமிழ் ஆய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் சிவானந்தம் நகைச் சுவை மாமருந்து என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்
மனநல நிபுணர்டாக்டர் ராஜ கோபால்,யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் பணி நிறைவு ராஜரத்தினம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க செயலாளர் சத்தியநாதன், நல்லாசிரியர் பணி நிறைவு புலவர் கோபால கிருட்டி னன்,ஓரியண்டல் இன்சூரன்ஸ் முகவர் ரமேஷ் ,அழகம்மாள் கிளை நூலகம் வாசகர் வட்ட தலைவர் தனபாலகிருஷ்ணன் ஆகியோரு களுக்கு நூல் வழங்கப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு கிராம வங்கி யோக லட்சுமி அனைவரை யும் வரவேற்றார்.நிறைவாக அருள்நிதி புருஷோத்தமன் நன்றி கூறினார்
நிகழ்ச்சி தொகுப்புரையை தஞ்சாவூர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் ராஜமாணிக்கம் சிறப்பாக செய்திருந்தார்.
தஞ்சாவூரில் நகைச்சுவை மாமருந்து நூல் வெளியீட்டு விழா



