கிருஷ்ணகிரி, செப். 27 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு பாதுகாப்பான பட்டாசு விற்பனை, பட்டாசு கடை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா, துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், பட்டாசு கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



