சிவகங்கை, அக். 5:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை ரோடு, பழைய ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் அருகில் அருவி பேபி ஷாப்பின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை டாக்டர் டி.கே. பிரபுவின் தந்தையும், நான்காம் தூண் தமிழ் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான துரை கருணாநிதி கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்.
விழாவில் CS மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்டாலின் ராஜா, அமலா கருத்தரிப்பு மைய நிர்வாக இயக்குநர் டாக்டர் அமலா ஸ்டாலின், தம்பிரான் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம், ஷிவானி கருத்தரிப்பு மைய நிர்வாக இயக்குநர் டாக்டர் உமா சோமசுந்தரம், குளோபல் மிஷின் மருத்துவமனை சேர்மன் டாக்டர் குமரேசன், ராகவகுமார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சூர்யராம் ஆரவிந்த், ஐஸ்வர்யா கருத்தரிப்பு மைய நிர்வாக இயக்குநர் டாக்டர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர். காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் நந்தகுமார், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் மாடசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, காரைக்குடியில் அருவி பேபி ஷாப்பின் 6வது கிளை திறக்கப்பட்டுள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட ஷோரூமில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தேவையான சோப், ஆயில், ஆடைகள், பொம்மைகள், காலணிகள், குழந்தைகள் வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அருவி பேபி ஷாப் நிர்வாக இயக்குநர்கள் மனோஜ் குமார், சக்திவேல் யுவராஜ் ஆகியோர் முக்கிய விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று, நினைவுப் பரிசுகளை வழங்கினர். குழும மேலாளர் சேசுராஜ், மண்டல மேலாளர் ஜெயக்குமார் மற்றும் கிளை மேலாளர் விக்னேஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



