By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
கனஂனியாகுமரி

காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை

Last updated: July 18, 2025 5:59 pm
July 18, 2025
71 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 18 –

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யாகாவாராயினும் நாகாக்க எனும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப கறைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன் தன்னுடைய தகுதியை பற்றி திருச்சி சிவா சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேடை கிடைத்து விட்டது மைக் கிடைத்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நீங்கள் நினைத்து கர்மவீரர் காமராஜரை பற்றி பேசி இருப்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க செயல்.

காமராஜர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார். அவர் இறக்கும் பொழுது அவர் பாக்கெட்டிலே என்ன இருந்தது அவருக்கு உடமையாக சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டிலிருந்து நான்கு ஐந்து வேஷ்டி துண்டுகளோடு மறைந்து போனவர். காமராஜர் என்பதை வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். எதை பேசுகிறோம் என்ன பேசுகிறோம் ? சுய நினைவில் தான் பேசுகிறோமா என தெரியாமல் எதை எதையோ பிதற்றி இருக்கிறார் திருச்சி சிவா. ஏசி இல்லாமல் காமராஜர் தூங்க மாட்டார் என்று சொல்லியிருக்கிறார். ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர்.

கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு நாகரீகமாக நான் என்னுடைய கண்டனத்தை பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை திருச்சி சிவா மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் கூட காமராஜரை தமிழக மக்களை காக்க வந்த ரட்சகர் என பேசியது, குடியரசு பத்திரிக்கையில் எழுதியது அனைவரும் அறிந்த ஒன்று. நாளும் மக்களுக்காக சிந்தித்து நாட்டு மக்களுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் கர்மவீரர் காமராஜர். 9 ஆண்டு காலம் நாட்டின் விடுதலைக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதை நாடறியும். இயக்கம் பெரிதா பதவி பெரிதா என்ற நிலை வந்த போது 9 ஆண்டு காலம் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த காமராஜர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் பணியாற்ற சென்றவர். பல பிரதமர்களை தலைவர்களை உருவாக்கியதால் கிங்மேக்கர் என அழைக்கப்பட்டவர்.

தமிழகத்தை தாண்டினாலே கோட்டும் சூட்டும் போட்டு அலையும் அரசியல் அலப்பறைகள் மத்தியில் ரஷ்யா நாட்டுக்கு சென்ற போது கூட வேட்டி சட்டையில் சென்ற எளிமைக்கு சொந்தக்காரர் கர்மவீரர் காமராஜர். மக்களை சந்திக்காமல் இளைஞர்களுக்கு வழிவிடாமல் கொல்லைப்புறவழியில் பதவி சுகத்தை அனுபவித்து வரும் திருச்சி சிவா போன்ற தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள் கர்மவீரர் காமராஜரை பற்றி தொடர்ந்து பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமனம்: கலெக்டர் உத்தரவு
மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
ஆட்டத்தை தொடங்கிய சசிகலா, கட்சியும் ரெடி: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
மேல்புறம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம்
காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோ நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கனமழை வேரோடு சாய்ந்த மரம்

November 21, 2024
65 Views
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு
அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி
மாவட்டத்திட்டமிடும் குழு கூட்டம்
தமிழகம் வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account