களியக்காவிளை, பிப். 16 –
களியக்காவிளை அருகே செங்கல் சிவபார்வதி கோவில் சிவராத்திரி விழா பிப்ரவரி 3-ம் தேதி துவங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள், கலை நிகழ்சிகள் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் மாநாடு நடந்தது. இதில் கேரளா மாநில ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து அதிருத்ர மகாயக்ஞம் மற்றும் மகாசிவராத்திரி மஹோத்சவத்தின் நிறைவு அமர்வைத் தொடங்கி வைத்துப் பேசினார். கோயிலின் தலைவர் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி விழாவிற்கு தலைமை தாங்கினார். காந்திமித்ரா மண்டலத் தலைவர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் நாயர் வரவேற்றார். நெய்யாட்டின்கரா எம்எல்ஏ கே.அன்சலன், கோவளம் எம்எல்ஏ எம்.வின்சென்ட், உதய சமுத்திர குழுமத்தின் எம்.டி. எஸ். ராஜசேகரன் நாயர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேசிய கீதத்துடன் மாநாடு நிறைவடைந்தது.



