சென்னை, ஆகஸ்ட் 3 –
சென்னை கிறித்துவக் கல்லூரி மேனிலைப் பள்ளியில் 1976 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் நிதி உதவியுடன் ரூ.80 இலட்சம் செலவில் பள்ளியின் கடிகாரக் கோபுரம், பெயர்ப்பலகையுடன் கூடிய அலங்கார நுழைவாயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எம்.சி.சி. அசோசியேசன் தலைவர் கே.எம். மேமன் கலந்து கொண்டு இந்நுழைவாயில் பெயர் பலகையை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் எம்.சி.சி. பள்ளியின் தலைமையாசிரியரும் தாளாளருமான ஜெபதாஸ் தினகரன் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எம்.சி.சி பள்ளியின் தாளாளர் ஜெபதாஸ் தினகரன் இந்நிகழ்வு குறித்து பேசுகையில்: 191 ஆண்டுகள் பராம்பரியம் மிக்க இப்பள்ளியின் புதிய நுழைவாயில் திறப்பு விழாவிற்கு வருகை தந்து திறந்து வைத்த எம்.சி.சி அசோஸேசியன் தலைவர் கே.எம்.மேமன் அவர்களுக்கும், இந்நுழைவாயிலை அமைக்க ரூ.20லட்சம் நிதி உதவி அளித்த 1976 ஆண்டு எம்.சி.சி.பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கும் இப்பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.



