சுசீந்திரம், பிப். 4 –
நாகர்கோவில் என்.ஜி.ஓ.காலனியில் அமைந்துள்ள இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 29வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் வி.பி.மணி தலைமை தாங்கினார். முதல்வர் ஜோஸ்லின் ஞான கிறிஸ்டி மணி முன்னிலை வகித்து ஆண்டறிக்கையினை வாசித்தார். சிறப்பு விருந்தினராக சிரில் சேவியர் (ஊக்கமூட்டும் பேச்சாளர்) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மற்றும் இவான்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் வழக்கறிஞர் பி.வெல்பின், பிஷோலா செப்பாஷியா வெல்பின், முதல்வர் தனசுஜி, தென்தாமரைகுளம் அருகே சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் அமைந்துள்ள ஸ்பிரிங் பீல்டு பள்ளி முதல்வர் டாக்டர். இதய நவீனா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மற்றும் பள்ளி வேலை நாட்கள் முழுமையும் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு முழு வருகை பதிவிற்கான பரிசுகள் வழங்கப்பட்டது. விழா மேடையில் பெற்றோர்களுக்கான சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ- மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இறுதியில் நாட்டு பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.



