தஞ்சாவூர், அக்டோபர் 27 –
தஞ்சாவூரில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் மோசமான வழக்குகள் உள்ளவர்களுடன் விஜய் கூட்டணி வைக்க தயாராக இல்லை. எல்லோரையும் சேர்த்து போக வேண்டும் என்ற மனப்போக்கு இல்லாத பழனிச்சாமியும், உதயகுமார் மற்றவர்களும் எதையும் சாதிக்க முடியாது. பெரிய படுதோல்வி ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு கிடையாது. எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் எந்த தொகுதியிலும் போட்டியிட வரமாட்டார்கள். அது தான் நடக்கப்போகிறது.
2026 இல் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் தேடி அலைகின்ற சூழல் வரும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொண்டேன் எனக் கூறவில்லை. எடப்பாடி பழனிச்சாமியுடன் விஜய் சேருவார் என கனவில் கூட நினைக்க வேண்டாம். டெல்டா பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களே பார்வையிடுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



