மதுரை, ஜூலை 15 –
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா “உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்” மதுரை மாவட்டம், பேரரையூர் வட்டம், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (Block Development Office) மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் கிராமப்புறப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொய்வின்றி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டும் என்றும், முடிவுற்ற திட்டப் பணிகளைத் தாமதமின்றிப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வர வேண்டும் அறிவுறுத்தினார்.



