கன்னியாகுமரி, டிச. 6 –
நேற்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள். கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமை யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப் பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



