ஈரோடு, ஜூன் 24 –
வருகிற 28ம் தேதி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.
எனவே பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது 29-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை வீடு வீடாக சென்று பார்வையிடப்பட்டு விடுபட்ட 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இத்தகவலை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.



