தென் தாமரை குளம், ஜூலை 17 –
இலந்தையடிவிளை அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளான காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளியில் பேச்சு, பாட்டு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முகிலன் குடியிருப்பு ஊர் தலைவர் ஆர்.எஸ். பார்த்தசாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் செம்பியன், கவுன்சிலர் பாமா ஜெகநாதன், ஊர் நிர்வாகிகள் செல்ல சிவலிங்கம், கிருஷ்ண கோபால், பெற்றார் ஆசிரியர் சங்க தலைவர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.