By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: என் உயிர், பொருள், ஆவி அனைத்தும் தமிழக மக்களுக்காக; திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > என் உயிர், பொருள், ஆவி அனைத்தும் தமிழக மக்களுக்காக; திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிசென்னைதமிழ்நாடு

என் உயிர், பொருள், ஆவி அனைத்தும் தமிழக மக்களுக்காக; திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி

Last updated: December 11, 2025 6:56 pm
December 11, 2025
43 Views
Share
SHARE

சென்னை, டிசம்பர் 11 –

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், கலப்பை மக்கள் இயக்கத் தலைவருமான பி.டி. செல்வகுமார், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யுடன் சுமார் 27 ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றியவர் பி.டி. செல்வகுமார். இவர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். சமீப காலமாக, பி.டி. செல்வகுமார் நடிகர் விஜய்யைப் பற்றிய சில விமர்சனங்களை முன்வைத்து பேட்டிகள் அளித்து வந்தார். இந்தச் சூழலில், இன்று பி.டி. செல்வகுமார், தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைந்தார்.

தி.மு.க.வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி. செல்வகுமார், “விஜய் ஒரு நடிகர். அவரோடு பணியாற்றும் போது அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்ற எண்ணத்தில் நானும் அவர் கூட இருந்து கட்டமைத்தவன் தான். இந்த கலப்பை மக்கள் இயக்கம் எப்படி கட்டமைத்து அதை ஒழுங்காக நடத்துகிறேனோ அதுபோல விஜய் மக்கள் இயக்கத்திற்கும் நான் ஒரு மிகப்பெரிய ஒரு தூணாக இருந்து பணியாற்றியவன் என்று அவர்களே சொல்லி இருக்கிறார்கள். காலப்போக்கில் புதிதாக அநேகர் உள்ளே வருகிறார்கள். அப்படி புதிதாக வருபவர்களால் எங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அங்கு தொடர முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது. என்றைக்குமே நிலவு நிலவுதான். விஜய் ஒரு நிலவு மாதிரி தான். 15 நாளில் நிலவு எப்படி மறைந்து போகுமோ அப்படியே நடிகர்களுடைய சேவையும் இருக்கும்.

மக்களையும், ரசிகர்களையும் சரியான வழியில் நடத்தி அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வாரா என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடைய ஆசை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். என் உயிர், பொருள், ஆவி அனைத்தும் தமிழக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு ஒரு நல்ல கட்டமைப்பு தேவைப்பட்டது. இன்றைக்கு இருக்கும் சூழலில் அந்த கட்டமைப்பு திமுகவில் உள்ளது. திமுக மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அதனால் தான் என்னையும் திமுகவில் இணைத்துக் கொண்டேன்”. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் நவீன பஸ் நிலையம் பணிகளை அமைச்சர் துவக்கினார்
கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு
நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவேன்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ மார்க்கண்டயேன்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
மார்த்தாண்டம் பேரூராட்சி தலைவிக்கு கொலை மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

வழுவூர் அருகே 54 அடி உயர சிவன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவங்கின; வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பு

July 1, 2025
186 Views
திரௌபதி கோவிலில் தெருகூத்து நாடகம் நடைப்பெற்று
பாலமுருகா பஜாஜ் நிறுவனத்தில்பஜாஜ் பல்சர் NS400 பைக் அறிமுகம்
கள்ள சாராய மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ரத்த தான முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account