ஆம்பூர், மே 23 –
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் வீதியில் வைகாசி மாத வளர்பிறை சஷ்டி நன்னாளை முன்னிட்டு இ.கே.சேகர் குடும்பத்தினர் சார்பாக 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மகா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சி ஸ்ரீ சூரசம்ஹார மூர்த்தியின் அருளுடனும், அனைவரின் நினைவில் வாழும் வி.தாமோதரன் நினைவில் நடைபெற்றது.
விழாவை 17வது வார்டு நகர மன்ற உறுப்பினர் டி.சத்யா தொடங்கி வைத்தார். இதில் ஸ்ரீ எல்லையம்மன் ஆலய திருப்பணி தொண்டர்களான கார்த்திகேயன், வெங்கடேசன், கேசவன், குப்புசாமி, ஏ.கோவிந்தன், சண்முகம் மேஸ்திரி, ராஜிவேலு, கணேசன், பூபதி, விமல்நாதன் ஆசிரியர், தரணி அட்வகேட், ராஜேந்திரன், மகி மேஸ்திரி, பாஸ்கர், கே.சதீஷ், கே.கோபி, முனிராஜ், குடும்பத்தினர், எஸ்.ராகவன், விஜி, வி.டி.எம். ஸ்டோர் ஊழியர்கள் மற்றும் வேல்முருகன் குழுமத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அன்னதான விழா ஏற்பாடுகளை இ.கே.எஸ்.பழனி, சத்யா, தீபிகா, அப்பகுதி மக்கள் மற்றும் திருச்செந்தூர் முருக பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.



