தஞ்சாவூர், ஜூலை 10 –
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளித்து சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டகலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற ஏழை மக்கள் விவசாயிகள் மற்றும் பெண்கள் வாழ்வதற்கு அரசு அரணாக இருந்து வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை நிர்த்துப்போக செய்யாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விபி – ஜி, ராம்-ஜி என்ற புதிய திட்டத்தையும் அதில் உள்ள ஆபத்தான விதிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் கூலி ரூபாய் 700 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் வேலை உறுதி அளிப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி கண்டன உரையாற்றினர். மாநில குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி வசந்தி மாவட்ட செயலாளர் சரிதா, மாவட்ட பொருளாளர் மேரி, மாவட்ட துணை செயலாளர் அம்சவல்லி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



