மதுரை, ஜூலை 10 –
மதுரை மாவட்டம் வள்ளல் பொன். பாண்டித்துரை தேவர் சிலைப்பேட கல்வெட்டு உடைப்பு: காவல்துறை துணை ஆணையரிடம் மனு – உரிய நடவடிக்கை எடுக்க உறுதி
நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவி தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காக அரும்பணியாற்றிய வள்ளல் பொன். பாண்டித்துரை தேவர் அவர்களின் மதுரையில் அமைந்துள்ள சிலைப்பேடத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு சமூக விரோதிகளால் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மதுரை காவல்துறை துணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை துணை ஆணையர், சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த நிகழ்வில் மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில தலைமைக் கழக செயலாளர் வேலுச்சாமி, அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒ. வை. தியாகராஜன், தேனி செல்வம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் வண்டியூர் கணேசன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மனு வழங்கினர்.
வள்ளல் பொன். பாண்டித்துரை தேவர் அவர்களின் நினைவிடத்தையும் வரலாற்றுச் சின்னங்களையும் அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.



