திருச்சி, மே 22 –
மணப்பாறை அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ் பஞ்சரானதால் நின்றபோது, சென்னைக்கு பார்சல் ஏற்றிச் சென்ற லாரி அதன் பின்பக்கத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து லாரியில் சிக்கிய ஓட்டுநரை மீட்டனர். துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



