சேலம் , அக்:09
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும், 18 வயது நிறைவடைந்த இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாகச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
தேதிகள்: அக்டோபர் 10 மற்றும் அக்டோபர் 17, 2026 (சனிக்கிழமைகள்)
தகுதியுள்ளவர்கள் சிறப்பு முகாம்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும், voters.eci.gov.in இணையதளம் மற்றும் Voter Helpline App மூலமாகவும் வாக்காளர் பதிவு செய்யலாம்.
புதிய வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



