நாகர்கோவில், ஜூலை 7 –
நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் அருமை தங்கம் (72). இவரது கணவர் ராஜமணி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் அருமை தங்கம் தனியாக வசித்து வருகிறார். கடந்த 26.8.2025 அன்று அருமை தங்கம் வீட்டுக்குள் கண்டால் தெரியும் 30 வயது மதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகுந்து அவரது முகத்தில் மயக்கப் பொடி தூவி, வீட்டிலிருந்து 2 பவுன் எடை உள்ள தங்க செயின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மற்றும் ரூபாய் 18 ஆயிரம் ரொக்க பணம் போன்றவற்றை திருடி சென்று விட்டார்.
இது குறித்து அப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசார் சென்று விசாரித்தும் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தடயங்கள் ஏதும் இல்லாததால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி அருமை தங்கம் சார்பில் நாகர்கோவில் குத்தவியல் நீதிமன்றம் – 2-ல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், போலீசார் இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் பேரில் சம்பவம் நடந்து சுமார் 10 மாதங்களுக்கு பின் அருமை தங்கம் புகாரின் பேரில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 30 வயது மதிக்கத்தக்க கண்டால் தெரியும் நபர் என கூறப்படும் நபர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


