திருச்சி, ஜூன் 20 –
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்த விஜய், திருட்டு வழக்கில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஊசியை விழுங்க முயன்றபோது, கான்ஸ்டபிள் வேல்முருகன் அதைத் தடுக்க முயன்றார். அப்போது விஜய், வேல்முருகனின் கையை கடித்து காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



