தென்காசி, ஜூன் 15 –
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திராவிட முன்னேற்றக் கழக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கலை கதிரவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். மிகவும் சிறப்பாக நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் இறுதியாக சட்டமன்ற உறுப்பினர் கலை கதிரவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்: தென்காசி சட்டமன்ற தொகுதி மக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் பாலமாக இருந்து தொகுதியின் பிரச்சனைகளை தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் முன்னாள் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், முன்னாள் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை, தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி மாவட்ட துணை செயலாளர் கனிமொழி மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



