By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்

Last updated: October 27, 2025 7:51 pm
October 27, 2025
39 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 27 –

திருவட்டாறு அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவரின் மகள் ஒருவர் எம்சிஏ பட்டதாரி ஆக உள்ளார். இவருக்கும் புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த வாலிபர் பெங்களூருவில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று 27ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது. இதனால் திருமணத்திற்கு முந்தின நாள் 26 ஆம் தேதி மாலை உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பெண் வீட்டார் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த சூழலில் பெண்ணின் தந்தைக்கு மணமகனின் மாமா என்று ஒருவர் போனில் பேசியுள்ளார். அதில் மணமகன் பெங்களூருவில் ஒரு வழக்கில் கைதாகி உள்ளதாகவும், உங்கள் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதை அடுத்து திருமண வரவேற்பை நிறுத்தி விட்டு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மனமகனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மணமகன் மற்றும் அவரது பெற்றோரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. தொடர்ந்து பெண் வீட்டார் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வாலிபர் வேலை பார்த்த பெங்களூர் ஐடி நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். தொடர்ந்து பெங்களூரு போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூர் போலீசார் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சென்று விசாரித்த போது பழனியை சேர்ந்த உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் கடந்த 25ஆம் தேதி திருமணம் நடந்தது தெரிய வந்தது. ஆனால் வாலிபர் தற்போது அங்கு இல்லை என தெரிந்தது.
அதே நேரம் அவரை திருமணம் செய்த பெண் திருமணத்திற்கான ஆதாரம், போட்டோ போன்றவற்றை பெங்களூரு போலீசாரிடம் அனுப்பி உள்ளார். நாங்கள் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தற்போது திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் திருவட்டார் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தகவலை மணப்பெண் வீட்டாருக்கு விவரம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இன்று நடக்க இருந்த திருமணத்தை மணப்பெண் வீட்டார் ரத்து செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகள் திறந்து வைத்த புதிய அங்கன்வாடி கட்டிடம்
பள்ளம்துறை கடற்கரையில் உலக மீனவர் தினம் கொண்டாட்டம்
நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் சிலை திறப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 20 ம் தேதி திறக்கிறார்
பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணி

October 22, 2024
59 Views
கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்
2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு; 9ம் தேதி நடைபெறுகிறது; குமரியில் 5394 பேர் எழுதயிருக்கின்றனர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை – பொன். கௌதம சிகாமணி பங்கேற்பு
சங்கரன்கோவிலில் போக்குவரத்து மாற்றம்; வியாபாரிகள் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account