By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்

Last updated: June 18, 2026 5:47 pm
June 18, 2026
33 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜுன் 19

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார். மகாமக திருவிழாவையொட்டி மகாமக குளத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், மாநகராட்சி மூலம் செயல்படுத்த வேண்டிய கட்டுமான பணிகள், மின் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பணிகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களுடன் கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்.

சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை யின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்தும் கடையின் மூலம் பயன் பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும், மின்னணு விற்பனை முனைய கருவி செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.

ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் குழந்தைகள் நேய பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 34.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்ற 2 வகுப்பறைகளை பார்வையிட்ட கலெக்டர் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது குடிநீர், சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் விரைவாக செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

செம்பியவரம்பல் ஊராட்சியில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மினி ஸ்டேடியம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, உயர்தரத்தின் பணிகளை விரைந்து முடித்து, இளைஞர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து 15-வது மத்திய நிதி குழு பொது சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அளவு கட்டிடமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் கும்பகோணம் சமூக நீதி கல்லூரி மாணவிகள் விடுதிகளை பார்வையிட்டு, அங்கு தங்கு உள்ள மாணவி களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் திருமலை, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரகுமார், உதவி கலெக்டர் பயிற்சி சுபாஷ் கார்த்திக், தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமானுல்லா, நந்தினி ஒன்றிய பொறியாளர் தமிழ்ச்செல்வன், திருநாவுக்கரசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? எம்.பி. துரை வைகோ விளக்கம்
உயர் நீதிமன்றம் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது
கன்னியாகுமரி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு
கார் பார்க்கிங் செல்லும் பாதையா இது? கன்னியாகுமரிக்கு வந்து நொந்து செல்லும் சுற்றுலா பயணிகள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் திமுக மாவட்ட செயலாளர் பொன். கௌதம சிகாமணி பிறந்தநாள் விழா

August 22, 2025
57 Views
முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30ஆம் ஆண்டு
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள்
வடக்குதாமரைகுளம் அருகே ரெயில் மோதி முதியவர் சாவு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account