தஞ்சாவூர், ஆக. 25 –
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் அன்பு இல்லத்தில் புனித அன்னை தெரசாவின் 115வது பிறந்தநாள் விழா பிரபல திரைப்பட நடிகரும் தொழிலதிபருமான துரை. சுதாகர் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மதர் தெரசா கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் ஆதரவற்ற மாணவ, மாணவியர்களில் 77 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ.8,45,000/-க்கான காசோலைகளையும், கடந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பில் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை தலா ரூ. 1,000/-மும், நலிவுற்ற பெண்கள் 9 பேருக்கு தொழில் செய்வதற்குத் தேவையான ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான அரவை இயந்திரம் மற்றும் தையல் இயந்திரங்களையும், 13 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர மருந்து மாத்திரைகள், அரிசி மற்றும் மளிகைப் பொருட்களையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுயவேலைவாய்ப்பு நிறுவனமும் இணைந்து (RSETI) நடத்திய தையல் பயிற்சியில் பவுண்டேசன் மூலம் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 13 கைம்பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்களுக்கு பயிற்சி முடித்ததற்கான அரசு சான்றிதழ்களையும் மற்றும் பவுண்டேசன் தொடர்ந்து நடத்தி வரும் இலவச இ-சேவை முகாம் மூலம் அரசு சான்றிதழ்களுக்கு பதிவு செய்த கைம்பெண்களில் 19 பேருக்கு அரசு சான்றிதழ்களையும் பயனாளிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
மதர் தெரசா பவுண்டேசன் தலைவர் சவரிமுத்து மதர் தெரசா பவுண்டேசன் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்து புனித அன்னை தெரசவின் 115-வது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். புனித அன்னை தெரசாவின் பிறந்தநாள் கேக் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அறங்காவலர்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், மருத்துவர் ராதாபாய் மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார் நன்றியுரையாற்றினார். விழாவில் 400-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர். மதர் தெரசா பவுண்டேசன் நிர்வாக மேலாளர் மெர்சி, மதர் தெரசா ஜாய் ஹோம் மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ராணி, ஷர்மிளா, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்டியா, அபிராமி, வர்ஷினி, சேவியர் மற்றும் இந்திராணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.



