சென்னை, ஆக. 03 –
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 37வது ஷோரூம் திறப்பு விழா சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கடரமணன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார்.
மேலும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி, தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத் சென்னை குரோம்பேட்டை கிளை தலைவர் சுஹைல் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் உடனிருந்தனர்.
இந்த ஷோரூமில் திறப்பு விழாச் சலுகைகளாக தங்கம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரத்தில் 30% வரை தள்ளபடி பெறலாம் . மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடியும் மற்றும் வெள்ளி பொருட்ககளின் விலையிலிருந்து பிளாட் 10% தள்ளுபடியும் பெறலாம்.



