By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை சரவணம்பட்டியில் போக்குவரத்து காவல்துறையின் அதிரடி விழிப்புணர்வு & அபராத நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை சரவணம்பட்டியில் போக்குவரத்து காவல்துறையின் அதிரடி விழிப்புணர்வு & அபராத நடவடிக்கை
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை சரவணம்பட்டியில் போக்குவரத்து காவல்துறையின் அதிரடி விழிப்புணர்வு & அபராத நடவடிக்கை

Last updated: August 6, 2026 2:52 pm
August 6, 2026
24 Views
Share
SHARE

கோவை, ஆக. 06 –

கோவை மாநகரில் சாலை விபத்துகளைக் குறைக்கவும், தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளிடையே வலியுறுத்தவும் கோவை மாநகர காவல் துறை தொடர்ந்து பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் படியும்,போக்குவரத்து காவல் துணை ஆணையர் வழிகாட்டுதலின்படியும், ‘உயிர்’ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தீவிர சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சரவணம்பட்டி பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில், போக்குவரத்து காவலர்கள் மற்றும் ‘உயிர்’ அமைப்பின் தன்னார்வலர்கள் இணைந்து தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி வழியாகத் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கி வந்த வாகன ஓட்டிகளைத் தடுத்து நிறுத்தி,அவர்களிடம் போக்குவரத்து காவலர்கள் துரித நடவடிக்கை எடுத்தனர்.

சோதனையின் போது விழிப்புணர்வு, தலைகவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள், விபத்தின் போது தலைகவசம் எவ்வாறு உயிரைக் காக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை காவலர்கள் மற்றும் ‘உயிர்’ அமைப்பினர் எடுத்துரைத்தனர். அறிவுரைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், தலைகவசம் அணியாமல் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய நபர்களுக்கு உடனடியாக அபராதமும் விதிக்கப்பட்டது. “சாலைப் பாதுகாப்பு என்பது அபராதத்திற்காக அல்ல; உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக!”என்பதை உணர்த்தும் வகையில் இந்த விழிப்புணர்வு முகாம் அமைந்தது.

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் தரமான தலைகவசம் அணிய வேண்டும் என்றும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைகவசம் அணிவது சட்டப்படி மற்றும் பாதுகாப்பு ரீதியாக அவசியமானது என்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் திறந்து கிடந்த பீர் பாட்டில் இருந்த மதுவை குடித்தவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
கோவை ரெங்காஸ் கல்ச்சுரல் அகாடமி சார்பில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியத்தில் சாதனை
திருவாரூர் அருகே ஆதரவின்றி தவித்த குழந்தைகளிடம் வீடியோ காலில் உரையாடி,தேவையான உதவிகளை செய்து கொடுத்த முதலமைச்சர்
ஈரோடு மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை: வருமான வரித்துறை இணை ஆணையர் பங்கேற்பு
திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

பணிநிறைவு பாராட்டு விழா

May 1, 2026
52 Views
திருச்சி அருகே இரண்டு பைக்கில் மோதி விபத்து முதியவர் பலி
திரலான பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்
மாவீரன் அழகு முத்து கோன் அவர்களின் 314-வது ஜெயந்தி
மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account