குளச்சல், ஏப். 27 –
குளச்சல் அருகே கோடி முனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சேசு ஆண்டனி (60). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மிக்கேல்ராஜ் என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று ஏசு ஆண்டனி அவரது நண்பர் சீயோன் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மிக்கேல் ராஜ், ஆண்டனி சேவியர், அவரது மனைவி மேரி அனிதா மற்றும் 2 மகள்கள் சேர்ந்து சேர்ந்து சேசு ஆன்டனியிடம் தகராறு ஈடுபட்டுள்ளனர். மேலும் மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் சேசு ஆன்டனியை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதை அவரது மனைவி சகாய ஜோஷினி மற்றும் மகன் அருள் தட்டி கேட்டுள்ளனர். அவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சேசு ஆண்டனி, ஆண்டனி சேவியர், மிக்கேல் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக குளச்சல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் இது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


