தமிழகம், அக். 24.
திமுக தலைவர் ஸ்டாலின், இடைத்தேர்தல் தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, தேர்தல் பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் அறிவிப்பு எப்போது வெளியானாலும், கட்சி நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
வேட்பாளர் தேர்வு தலைமை முடிவு செய்யும்
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்தல், நிர்வாகிகளைத் தயார்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கட்சி கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



