நாகர்கோவில், அக் : 12
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி லதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்றும், உணவின் தரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.



