நாகர்கோவில், ஏப். 28 –
ஆரல்வாய்மொழி, மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் டேவிட் சுஜன் (30). தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரும், இவர் நண்பர் ஸ்டான்லி ஜோஸ் என்பவரும் கடந்த 25ஆம் தேதி இரவு 10:15 மணிக்கு பைக்கில் ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சாலையோரம் நின்ற டாரஸ் லாரியின் பின்னால் பைக் மோதியதில் இதில் ஸ்டான்லி ஜோஸ், டேவிட் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் தனித்தனி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி கேரள பதிவெண் கொண்ட டாரஸ் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்து வந்த டேவிட் இன்று உயிரிழந்தார். அவரது உடல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் ஜோஸ் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.



