கன்னியாகுமரி, ஆகஸ்ட் 01 –
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப்போட்டியில் அஞ்சுகிராமம் கிறைஸ்ட் சி.எம்.ஐ. மத்தியப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் நடைபெற்ற ஈட்டி எறியும் போட்டியில் நா. அரிகரசேது 2-ம் இடமும், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் மு. அருள் எபினேஷ் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அஞ்சுகிராமம் 11-வது வார்டு கவுன்சிலர் ஜோஸ் திவாகர் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பங்கு தந்தை டினு, பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.