By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: 15,000 மாத்திரைகள் பறிமுதல்: திருச்சியில் தொடரும் போதை கலாச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வீட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: 15,000 மாத்திரைகள் பறிமுதல்: திருச்சியில் தொடரும் போதை கலாச்சாரம்
குற்றம்தமிழ்நாடுதிருச்சி

வீட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: 15,000 மாத்திரைகள் பறிமுதல்: திருச்சியில் தொடரும் போதை கலாச்சாரம்

Last updated: July 18, 2026 2:08 pm
July 18, 2026
6 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 18 –

திருச்சியில் ஒரு வீட்டில் 15,000 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாநகரில் சமீபகாலமாகவே போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 40 நாட்களில் மட்டும் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் 3 இளைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் திருச்சியையே உலுக்கியது.

இதனைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திருச்சி பெரிய கடை வீதி மல்லிகை தெரு பகுதியில் உள்ள கணேஷ் பாண்டியன் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் பதுக்கப்பட்டு, விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கணேஷ் பாண்டியனின் வீட்டை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். இதில், போலீசார் கைப்பற்றிய போதைப்பொருட்களின் அளவை பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. அந்த வீட்டில் இருந்து சுமார் 15,000 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ரூ.1 லட்சம் ரொக்கம், 4 செல்போன்கள், 1 லேப்டாப், 1 இருசக்கர வாகனம், கத்தி – அரிவாள் ஆயுதங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த கணேஷ் பாண்டியன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன? இதன் பின்னணியில் பெரிய புள்ளிகள் யாரேனும் உள்ளனரா? யார் – யாருக்கெல்லாம் இவை விற்பனை செய்யப்பட இருந்தன? உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அண்மையில் உத்தரவிட்டார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் போலீசார் நடத்தி வரும் அதிரடி சோதனைகளில் இதுபோன்ற பல போதைப்பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை விழா: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
தென்காசியில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்
இனயம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் படுகாயம்
முன்னாள் அமைச்சர் மு.பெசாமிநாதனின் முன்னாள் உதவியாளர் முருகேசன் மீது உறவினர் பாலமுருகன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!
தொப்பூர் அருகே லாரி, ஆம்னி வேன், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்; ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

தற்காலிக ஆக்கிரமிப்பு அகற்றம்

July 3, 2024
82 Views
இலவச மருத்துவ ஆலோசனை சிகிச்சை முகாம்.
மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்
ஜவகர் சிறுவர் மன்றம் கோடைகால கலை பயிற்சி முகாம் நிறைவு விழா
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account