By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்

Last updated: November 24, 2025 3:05 pm
November 24, 2025
40 Views
Share
SHARE

விளாத்திகுளம், நவம்பர் 24 –

தமிழகத்தை பொருத்தமட்டில் விவசாயிகளுக்கு அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக ஓர் ஆண்டு வட்டியின்றி பயிர்க்கடன், கறவை மாடு வாங்கக்கடன், விவசாய மேம்பாட்டு கடன் என பல்வேறு கடன் உதவிகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது விவசாயிகளுக்கு அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடனுதவி வழங்கப்படாமல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் வட்டியில்லாக் கடன் பெற வருவதால் வங்கி முன்பு ஏராளமான விவசாயிகள் கொட்டும் மழையில் மணிக்கணக்கில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்க வரும் விவசாயிகளை, விளாத்திகுளம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் பணியாளர்கள் மிகவும் அநாகரிகமாக நடத்துவதோடு, ஆமை வேகத்தில் பணிகளை மேற்கொண்டு விவசாயிகளை அதிக நேரம் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும் இங்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் ஒரு நாளைக்கு மிகக் குறைவான அளவிலேயே விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

விவசாயிகள் எளிதில் கடனுதவிகள் பெற்று விவசாயப் பணிகளை மேற்கொண்டு பயன்பெற வேண்டுமெனவும், தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இருந்தும் கூட தற்போது, விவசாயிகள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் மட்டுமே கடன் பெற முடியும் என்ற இந்த அறிவிப்பால் விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் கடந்த சில நாட்களாக வங்கி முன்பு இருந்த சிமெண்ட் சாலை உடைக்கப்பட்டு கற்கள் குவிக்கப்பட்டுள்ளதால் வங்கிக்கு வரும் விவசாயிகள் பாதுகாப்பின்றி ஆபத்தான நிலையில் வங்கிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக இங்குள்ள வங்கி பணியாளர்கள் ஆமை வேகத்தில் செயல்படுவதால் விவசாயிகள் தற்போது கொட்டும் மழையில் பயிர்க்கடன் பெற பல மணிநேரம் நனைந்தபடி காத்துக் கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டும் கடன் பெற முடியும் என்ற இந்த நடைமுறையை ரத்து செய்து முன்பு வழங்கப்பட்டதை போல அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன்களை வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை; ரூ.12,000 அபராதம்; தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேக விழா
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்

May 1, 2026
51 Views
வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு
சிஐ.டி.யு 10, 000 பேருடன் தர்ணா போராட்டம்
கோரிக்கைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை
காதி கிராப்ட் சார்பில் காந்தியடிகளின் உருவப் படத்திற்கு மாலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account