கன்னியாகுமரி, அக் : 10
லட்சிய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், ராஜா டைட்டஸ் தலைமையில் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் மதுரை கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழா நடத்தி, 1,000 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



