தஞ்சாவூர்.ஜூன் 12
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1378 பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் தென்கிழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி யில் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். மாணவ மாணவியர்களுக்கு மலர் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்கள் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே பள்ளியி லேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் அந்தந்த பள்ளியில் ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது
இதன்படி தஞ்சாவூர் மாவட்டத் தில் அனைத்து வட்டாரங்களிலும் 27 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அந்தந்த பள்ளியி லேயே ஆதார் பதிவு மற்றும் பயிலு ம் பள்ளியிலேயே வங்கி கணக்கு எண் தொடங்குதல் முகாம் நடைபெற்றது. என்றார்கலெக்டர்
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள 1378 அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாபாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.



