By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் 40 ஆண்டுகளுக்கு பின் இடித்து அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் 40 ஆண்டுகளுக்கு பின் இடித்து அகற்றம்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் 40 ஆண்டுகளுக்கு பின் இடித்து அகற்றம்

Last updated: October 6, 2025 5:04 pm
October 6, 2025
72 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 6 –

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கன்னியம்பலம் மண்டபம், கன்னியாகுமரி தெற்கு ரத வீதியில் அமைந்து உள்ளது. வைகாசி விசாகத் திருவிழாவின்போது 10 நாட்களும் அம்மன் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும்போது பழமையான இந்த கன்னியம்பலம் மண்டபத்தில் அமர்ந்து இளைப்பாறுவது வழக்கம். அதன் பிறகு அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி தீபாராதனை காட்டப்பட்ட பிறகு அம்மன் இந்த மண்டபத்தில்இருந்து சன்னதி தெரு வழியாக கோவிலுக்கு செல்வது வழக்கம்.

அதுமட்டுமின்றி திருக்கார்த்திகை தீப திருவிழா அன்று அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தை இந்த கன்னியம்பலம் மண்டபத்தில் நிறுத்தி வைத்து சொக்கப்பனை கொளுத்தி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவதும் வழக்கம்.

மேலும் பண்டைய காலத்தில் இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் வெளியூர் பக்தர்கள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கோவில் நடை அடைத்த பிறகு கோவிலில் வழங்கப்படும் கட்டுசோறு உணவை வாங்கி சாப்பிட்டு விட்டு இந்த கன்னியம்பலம் மண்டபத்தில் மதிய வேளையில் தூங்கி இளைப்பாறுவது வழக்கம்.

அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கன்னியம்பலம் மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை 8 கடைகள் கட்டி வியாபாரம் செய்வதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் இந்த கன்னியம்பலம் மண்டபம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழா காலங்களில் பயன்படுத்த முடியாமல் மூடப்பட்டு கிடந்தது. இதைக் கண்டு பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை இடித்து அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் இந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்த ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு வந்தனர். இதைப் பார்த்த வியாபாரிகள் கொதிப்படைந்தனர். கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அதிகாரிகள் வியாபாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சில நாட்கள் அவர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கடைகளை அப்புறப்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று ஜேசிபி எந்திரம் மூலம் கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்; எஸ்.பி அதிரடி உத்தரவு
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஒரே செடியில் 42 கிலோ மரவள்ளிக் கிழங்கு
கொல்லங்கோடு அருகே மன வளர்ச்சி குன்றிய சிறுவன் சாவு
தவெக மாதவனுக்கு பிறந்தநாள்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்

April 9, 2025
58 Views
புதுக்கடையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
கே.ஆர்.பி. அணையின் 68-வது ஆண்டு துவக்க விழா
கடையநல்லூர் மாணவர்கள் வென்று அசத்தல்
திருவண்ணாமலை, வேங்கிக் கால் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னை டாஸ்மாக் இயக்குநரகம் முற்றுகை போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account