போகலூர், செப். 2 –
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக மாணவிகளை விட அதிக அளவில் பங்கேற்று அசத்திய மாணவர்களுக்கு பரிசு மழைகள் குவிந்தன. மாவட்ட அளவில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு கே.ஆர் தங்க மாளிகை சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி இணைந்து மாவட்ட அளவிலான 27வது செஸ் போட்டி நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட அசோசியேசன் செயலாளர் ரமேஷ் துணைச் செயலாளர் ஜீவா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு நடத்திய செஸ் போட்டியில் மாவட்ட அளவில் 321 மாணவர்கள் 184 மாணவிகள் என மொத்தம் 504 பேர் பங்கேற்றனர். செஸ் போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் ரோட்டரி துணை ஆளுநர் (மண்டலம் 2) டாக்டர் சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார்.
ராமநாதபுரம் கால் பந்தாட்ட கழகத் தலைவர் ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் பாத்திமா ஷானாஸ் பரூக் ஆகியோர் தலைமை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராமநாதபுரம் கேலக்ஸி பாலா, கே.ஆர். தங்க மாளிகை புருஷோத்தமன், ராமநாதபுரம் அமமுக நகரச் செயலாளர் ஜே.ஆர்.பி. மணிகண்டன், தொழிலதிபர் சாத்தையா ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.
விழாவில் ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் துணைத் தலைவர் தேவி உலகராஜ், தமிழ்நாடு சதுரங்க கழகம் மாநில இணை செயலாளர் கண்ணன், செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி முதல்வர் பார்வதி, துணை முதல்வர் விசாலாட்சி, ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் தலைவர் ஜெகன் அகிலன், செயலாளர் முகமது ரஃபி, பொருளாளர் திருமூலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அத்துடன் ஒருங்கிணைப்பாளர் வள்ளிநாயகம், தவசி லிங்கம், ஜோன்ஸ் கீதா மலைக்கண்ணன், பயிற்சியாளர்கள் சாலமன் ரத்தின சேகரன், திரவிய சிங்கம், சசிகுமார், ராஜன், பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.



