தென்தாமரைகுளம், ஆக. 12 –
பா.ஜ.க ஐ.டி விங் நிர்வாகி சுபாஷ் விடுத்துள்ள அறிக்கையில்: கடந்த சட்டமன்ற தேர்தலின்போது போலியான வாக்குறுதிகள் பலவற்றை அள்ளி வீசி பொதுமக்களின் வாக்குகளை சூறையாடியது தி.மு.க. இதில் குமரி மாவட்டத்தில் மட்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் ஆராய்ச்சி மையம் அமைத்தல் உட்பட நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் பற்பல.
இதேபோல் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக அறிவித்தது. வாக்குறுதியை நிறைவேற்ற தூய்மை பணியாளர்கள் போராடுவதை அனுமதித்ததே பெரிய சாதனையாக அமைச்சர் பேசுவது வேதனை. வாக்குறுதிகளை நிறைவேற்றதாத தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



