களியக்காவிளை, செப். 15 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில்
ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இலவச மருத்துவ முகாம். நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த பத்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு பொது மக்களுக்கு பயனடையும் வகையில் கோவில் கமிட்டி நிர்வாகம் சார்பில் ராமுனி சித்த இயற்கை மருத்துமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் கோவில் சந்நிதியில் நடைபெற்றது.
இதில் ரத்த அழுத்தம், கண் பரிசோதனை மேற்கொண்டு கண்புரை நோய்க்கான நவீன முறையிலான சிகிட்சை ரத்த கசிவு, விழித்திரை பாதிப்பு, சக்கரை நோயால் கண்பாதிப்பு மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் மீனச்சல் கிராம சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்து சென்றனர்.



