நாகர்கோவில், ஜூலை 9 –
மார்த்தாண்டம் அருகேயுள்ள மருதங்கோடு கோடன்விளை வீடு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் மகன் ஜெனிஸ் (30). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை மற்றும் 6,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த குளச்சல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.



