மதுரை, செப். 10 –
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையில் அருகிள் உள்ள KMR சர்வதேச பள்ளியில் மாணவச் செல்வங்களால் 2.5 லட்சம் விதைப் பந்துகள் தயாரிப்பு செய்தமைக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவனது இப்பள்ளியின் தாளாளர் டாக்டர்.பி. கிருஷ்ணவேணி தலைமையில் பள்ளி முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.கே. சரஸ்வதி, மூத்த முதல்வர் விஜயா சுந்தர் ஆகியோர் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மூத்த பதிவு மேலாளர் மற்றும் இணை ஆசிரியர் கோவை பி. ஜெகநாதன் பங்கேற்று பள்ளி மாணவ,
மாணவிகள் ஒன்றிணைந்து 2.5 லட்சம் விதைப் பந்துகள் மற்றும் 5000 வளர்ப்பு பைகைளைத் தயாரிப்பு செய்து உலக சாதனை செய்தமைக்கு பாராட்டுத் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி தாளாளர் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசுகையில்: பெருமைமிக்க நற்பெயரைப் பெற்று கல்வியில் சிறந்து விளங்குவதோடு எங்கள் மாணவர்கள் தன்னம்பிக்கை, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் உண்மையான உலகில் வெற்றிபெற அவர்களைத் தயார்படுத்தும் மதிப்புகளையும் பெறுகிறார்கள். குழந்தைகளை ஆதரவான சூழலில் வளர்த்து பொறுப்புள்ள உலகளாவிய குடிமக்களாக வளர அவர்களை அதிகாரம் அளிப்பதே எங்கள் தொலை நோக்குப் பார்வையாகும்.
மேலும் எங்கள் பள்ளியின் 11-வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஒரு பகுதியாக மூன்று பிரிவுகளில் உலக சாதனை நிகழ்வை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதோடு குழுப் பணி மற்றும் விடாமுயற்சி போன்ற பொறுப்பை வளர்க்கின்றன.
பல்லுயிர் பாதுகாப்பு, நகர்ப்புற விவசாயம் மற்றும் பசுமை தமிழ்நாடு மிஷன் திட்டத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக சுமார் 2,500 மாணவர்கள், பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, ஆசிரியர்கள் மற்றும் கேஎம்ஆர் குடும்பத்தினர் ஒன்றிணைந்து சுமார் 2.5 லட்சம் விதைப் பந்துகள் மற்றும் 5,000 வளர்ப்புப் பைகளைத் தயாரிப்பு செய்து பசுமையான, நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் வகையில் தயாரிப்பு செய்த விதைப் பந்துகளை மதுரை முதல் ராமேஸ்வரம் வரை சாலை நெடுகிலும் விதைப்பு செய்ய உள்ளோம்.
பாதி விதைப்பந்துகளை தமிழ்நாடு வனத்துறையிடம் வழங்க உள்ளோம். மீதமுள்ள விதைப்பந்துகளை எங்கள் பள்ளி மாணவர்களை வைத்து கிராமப்புறங்களில் நடவு செய்ய உள்ளோம் என்று கூறினார். இந்தப் பாராட்டு விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மாணவப் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்று சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.



