நாகர்கோவில், ஆக.29.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு, புதூர் கடலோரப் பகுதியில் உள்ள ஏ.வி.எம். கால்வாய் தூர்வாரும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.
கேரள எல்லையான நீரோடி முதல் வல்லவிளை, தூத்தூர், பூத்துறை, இரையுமன்துறை, தேங்காய்பட்டணம், குளச்சல், மண்டைக்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் வழியாக செல்லும் ஏ.வி.எம். கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் கால்வாயில் கழிவுகள் தேங்கி, ஆக்கிரமிப்புகளும் ஏற்பட்டிருந்தன. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து கால்வாயை தூய்மைப்படுத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
குளச்சல் முதல் மண்டைக்காடு புதூர் வரை 4,300 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள இக்கால்வாய், கல்குளம், மண்டைக்காடு, லெட்சுமிபுரம், குளச்சல் ஏ மற்றும் குளச்சல் பி ஆகிய நான்கு வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாகும். கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் கதிரவன், பொறியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதி வின்ஸ் ஆன்றோ, பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Files, images, and data analysis are unavailable until usage resets at 7:57 PM. Continue chatting with text only, or upgrade for more access.Try Plus free



