மதுரை, 22.08.2026
CONSORT அமைப்பும் மடீட்சியாவும் இணைந்து நடத்திய National Senior Citizens Day Celebration – 2026 விழா மதுரை மடீட்சியா ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. மூத்த குடிமக்களின் சமூகப் பங்களிப்பையும், அவர்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மடீட்சியா தலைவர் V. செந்திகுமார் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மூத்த குடிமக்களின் அனுபவமும் அறிவும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பயனளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அவருக்கு மடீட்சியா தலைவர் V. செந்திகுமார் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
மேலும், மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், அவர்களுக்கு உரிய மரியாதை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. இதில் CONSORT அமைப்பின் நிர்வாகிகள், மடீட்சியா உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



