தருமபுரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தத்தை உடனே துவக்க கோரி சிறை நிரப்பும் போராட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்று , பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து, ஓய்வு பெற்ற ஊழியருக்கு டி.ஏ உயர்த்தி வழங்கு
என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.



