By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி: கால்நடைகளுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி: கால்நடைகளுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தமிழ்நாடுதென்காசி

தென்காசி: கால்நடைகளுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Last updated: July 1, 2026 6:48 pm
July 1, 2026
46 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 1 –

தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி ஊராட்சி புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கால்நடைகளுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவிக்கையில்: தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கால்நடைகளுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத்தன்மையும், இரத்த சோகையும் ஏற்படும். பாதிக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்க விடக்கூடாது அவ்வாறு குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும். சிறந்த பராமரிப்பும் தடுப்பூசி போடுவதும் இந்நோயினை தடுக்க உகந்த வழியாகும்.

தென்காசி மாவட்டத்தில் 126320 பசு இனங்களுக்கும் 6892 எருமை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்காசி மாவட்டத்திலுள்ள 61 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை மருத்துவர்கள், கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டு 01.07.2026 முதல் 31..07..2026 வரை 31 நாட்களுக்கு தடுப்பூசிப்பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசிப்பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாட்களில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விவரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும் அல்லது பொது மக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இன்றைய தினம் 256 தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு சுகாதார அட்டை மற்றும் 42 கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கள் வழங்கி தடுப்பூசி போடப்பட்டது. ஆகவே கோமாரி நோய் தடுப்பூசி போடும் நாளில் விவசாயிகள் கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தவறாது தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.கோவில்ராஜா, உதவி இயக்குநர் மரு.தெரசா மேரி, கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.முத்துமாரி (தென்காசி), மரு.விஷ்ணு ராகவேந்திரன்(வல்லம்), கால்நடை ஆய்வாளர்கள் பழனிசாமி, அருண்குமார், முத்துலெட்சுமி மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 20ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்
முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கேட்டு திருவண்ணாமலையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
களியக்காவிளையில் 50 கண்காணிப்பு கேமராக்கள் திறந்த எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஆட்சித்தலைவர் முன்னிலையில் பூமி பூஜை

September 6, 2024
88 Views
பூச்செடி மர நாற்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
தமிழக முதல்வர் விஜய் உருவப்படத்தை “ரூபிக்ஸ் கியூப் மோசைக்”கில் உருவாக்கி உலக சாதனை
கன்னியாகுமரியில் அதிகாலையில் விபத்து: 6 பேர் தப்பினர்
100 சதவீதம் தமிழ் பெயர் பலகை உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account