சிவகங்கை, ஆக.28:
காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட திருவேலன்குடியைச் சேர்ந்த சின்னையா என்பவர், தனது முன்னோர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருவேலன்குடி மற்றும் கடம்பாவனம் பகுதிகளில் தனது தந்தை, தாத்தா பெயரில் இருந்த அசையா சொத்துக்களை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தமிழக முதல்வர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, தங்களது குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என சின்னையா கோரிக்கை விடுத்துள்ளார்.



