திருப்பூர், ஜூன் 28 –
நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஜெய்வாய் பாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாநகர காவல் போக்குவரத்து உதவி ஆணையாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றத்துடன் அவர்களுக்கு உதவி ஆணையாளர் சேகர்
போதை பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு மாணவர் போதை பயணத்தை நாடகமாக நடித்துக் காட்டினார்.