சுசீந்திரம், ஆக. 20 –
பறக்கை அருகே உள்ள காமச்சன்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னுலிங்கம் (36). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் மதுசூதனபுரத்தில் உள்ள தனது சகோதரி சித்ரா (42) என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் 18-ம் தேதி காலை சித்ரா வீட்டில் அனைவரும் வெளியே சென்று விட்டனர்.
பின்னர் மாலையில் சித்ரா திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் பொன்னுலிங்கம் பேனில் தூக்கில் தொங்கியவாறு கிடந்தவரை சித்ரா 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பொன்னுலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சித்ரா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன், சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


