By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பனை மரங்களை வெட்டுவதை தடுக்கும் அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > பனை மரங்களை வெட்டுவதை தடுக்கும் அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு பாராட்டு
திருநெல்வேலி

பனை மரங்களை வெட்டுவதை தடுக்கும் அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு பாராட்டு

Last updated: September 20, 2025 8:39 pm
September 20, 2025
193 Views
Share
SHARE

செப். 20 –

பனை மரங்களை வெட்டுவதற்கு தடை ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவன தலைவர் எம்.ஏ. தாமோதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்: தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழும் பனைமரம் அதன் அடி முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படக்கூடியது. அதனால் அதனை கற்பகதரு, கற்பக விருட்சம் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

பனை மரத்தின் தாயகம் நமது தமிழ்நாடுதான். தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரத்தை உலகறிச்செய்த பெருமை பனையின் ஓலைக்கு உண்டு. ஓளவையின் ஆத்தி சூடி தொடங்கி திருக்குறள், தொல்காப்பியம் என அனைத்து இலக்கியங்களும் பனை ஓலையினால் எழுதப்பட்டது. பைந்தமிழ் இலக்கியத்தின் தாய்வீடு பனைமரமாகும்.
பழங்கால சோழ மன்னர்கள் தங்கள் பொற்காசுகளில் அடையாள சின்னமாய் பனைமரத்தை பதித்தனர். இதன் பெருமை கருதி பாரிமன்னன் தனது சின்னமாக பனைமரத்தை வைத்து இருந்தான்.

உலகின் மூத்தகுடியான தமிழ் குடிக்கும், பனைமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ள நிலையில் கடல் அரிப்பு, புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து மனித குலத்தை காக்கும் மகத்தான பணிகளை பனைமரங்கள் செய்கிறது. மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை பாதுகாத்து, மகரந்த சேர்க்கை நடைபேற பெரிதும் உதவுகிறது. இதனால் விவசாயத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும், கிராம பொருளாதாரத்திற்கும் பெரும்பங்காற்றி வந்த பனை மரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு மனிதகுலத்திற்கும், அனைத்து உயிரினங்களுக்கும் மிகுந்த நன்மை தரும் பனைமரங்களை பாதுகாக்கவும், பனைமரங்கள் அழிக்கப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு அரசு 2021 – 2022 நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி சில வழிகாட்டு நெறிமுறைகளோடு அரசானை வெளியிட்டுள்ளது. அதன்படி பனைமரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரகன்றுகள் நடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறோம்.

வட்டார அளவிலான குழு பனை மரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தோட்டக்கலை துறை உதவி அலுவலர், கூட்டாக கிராமம் வாரியாக இருப்பு பதிவேட்டை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெட்டப்படும் மரங்களின் பாகங்களை எடுத்து செல்லும் போது தோட்டக்கலை துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் மூலம் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை காண்பிக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. பனைமரத்தை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பெருகவும், அழிவில் உள்ள பனைமரங்களை காக்கவும் அரசின் இத்தகைய நடவடிக்கை நிச்சயமாய் உதவும் என நம்புகின்றோம். பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதோடு அதனை பாதுகாப்பது நமது கடமை என்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்திடவும் அரசு தீவிரமுனைப்பு காட்டிட வேண்டும் என கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ. தாமோதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

செங்குந்தர் சமுதாயத்தின் சார்பில் சுவாமி அழைப்பு ஊர்வலம்
சங்கரன்கோவில் ஆடித்தபசு நிகழ்ச்சி
தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
மின் பகிர்மான நிலைய தற்காலிக கட்டிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

June 26, 2025
28 Views
மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது – அன்பில் மகேஷ்
திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மோதி விபத்து: 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, இராணிமேரி கல்லூரி வளாகத்திலிருந்து
அரசு மருத்துவக் கல்லூரி பணியாளர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account